சென்னை காசிமேடு பகுதியில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்தார்.
தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்த தேசிங்கு ராஜாவை, ஆட்டோவில் வந்ததாக கூறப்படும் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தேசிங்கு ராஜாவைக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்