தெலுங்கானா மாநிலத்தில் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடா நோக்கி சென்றுகொண்டிருந்த உறவினர் வீட்டு விசேஷத்துக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொட்டா துர்காபுரம் என்ற இடத்தில் சென்றபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலரிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.