தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மும்முனை மின்சாரத்தை நம்பி சுமார் 1000 ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால், இப்பகுதியில் மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படாததால், போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.