ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் 150 முதல் 155 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.