ஒரே இரவில் இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது கர்நாடகாவில் ஒரே இரவில் அனைத்து முஸ்லீம்களையும் இதர பிறபடுத்தப்பட்ட பிரிவினராக மாற்றி 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்குச் சொந்தக்காரர்களாகக் காங்கிரஸ் அரசு மாற்றியதாக தெரிவித்தார்.
இதன் மூலம் இதர பிறப்டுத்தபட்ட பிரிவினரின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதே நடைமுறையை பின்பற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்றும், இது அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையில் நடத்தப்பட்ட விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி நாள்தோறும் அரசியலமைப்பை அவமதித்து வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.