சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசுறியில் உள்ள பில்லாத்துறை கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன், சார்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
துறையூர், உறையூர், முசிறி, வில்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜானகிராமன் மீதும், அவரது மனைவி வசந்தி மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் அதிரடி தீர்ப்பளித்தார்.
மேலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைத்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.