திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி யோடிய விசாரணைக் கைதி மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பணகுடியைச் சேர்ந்த மணிகண்டன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால், மணிகண்டனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.