கரூர் அருகே மகனைக் கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜெகதாபியைச் சேர்ந்த மனோகரன் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் இருந்து விடுபடுவதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், மனோகரனின் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் புதிதாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார்.
இதனை மனோகரனின் மனைவி சுதா எதிர்த்ததால், மாணிக்கம் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த மனோகரன் இது குறித்து தந்தையிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம், தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மனோகரன் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறி உடலை எரித்துள்ளார். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.