தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் பாஜகவுக்கான ஆதரவு மனநிலை அதிகரித்து இருப்பதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் திருப்பூர் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்தியா முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலின்போது பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் திமுக அரசுக்கு சாதகமாக செயல்பட்டதாக சந்தேகம் எழுகிறது எனக் கூறிய அவர், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.