கோடை வெயிலின் தாக்கத்தால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.
18 புள்ளி 8 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில், 3 புள்ளி 4 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில், 26 புள்ளி 5 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், 19 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. 21 புள்ளி 2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில், 19 புள்ளி 4 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.