“டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கதறவேண்டும் என முன்னாள் தேசிய செயலாளரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள தனியார் மண்டத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.
அப்போது பேசிய அவர், ராஜஸ்தானில் பிரதமர் மோடி 90 நிமிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் எந்த இடத்திலும் அவர் சிறுபான்மை மக்கள் குறித்து தவறாக பேசவில்லை.
அப்படி பேசியிருந்தால் ஆதாரத்தை காட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசியவர், அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஆதாரம் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்துவிட்டதாகவும், அப்படி இருக்கையில், முதல்வர் ஸ்டாலின் ஏன் கதற வேண்டும் என்றும், ஜூன் 4 -ஆம் தேதிக்குப் பிறகு அமலாக்கத்துறை சென்னைக்கும் வரவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.