மண் பானைகள் செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை என கோவையில் மண் பானை செய்யும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் சாலையில் குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
இது பற்றி மண்பானை செய்யும் தொழிலாளர்கள் கூறுகையில், மண்பானை உற்பத்தி செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார்.
இதனால் மண் பாண்டம் செய்யும் தொழில் பெரிதும் நலிவடைந்து வருவதாகவும், போதுமான மண் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.