விழுப்புரத்தில் மக்களவை தேர்தல் பணியிலிருந்த பெண் கிராம நிர்வாக அலுவலரை மது போதையில் தாக்கிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஆ.கூடலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் சாந்தி என்பவர், கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, அதே கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலரான ராஜீவ்காந்தி என்பவர், உணவு வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் சாந்தியை வயிற்றில் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சாந்தி காவல்நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ராஜீவ்காந்தியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.