பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில், சாலையை கடக்க முயன்ற 2 சிறுவர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தனர்.
கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் 14 வயது மகன் நித்திஷ், அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
தீரன் நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.