கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வண்டிப்பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் அப்பர் அடிகளாரின் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில், கோயில் குளத்தில் அப்பர் தெப்பத்தில் வலம் வந்தார்.
அதன் பின்னர் அப்பருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு அப்பரை தரிசித்தனர்.