அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களில் தமிழக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது முகாம்களை கலைக்கும் படியும், போராட்டத்தை கைவிடக்கோரியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டம் வலுபெற்ற நிலையில் போலீசார் மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அசிந்தியா சிவலிங்கம் என்பவரும் ஒருவராவார்.
மேலும் மாணவி அசிந்தியா பல்கலை வளாகத்திற்குள் நுழைய தடை விதித்து பல்கலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.