தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியில் இருந்து 276 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 397 கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் முதல் கட்டமாக மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து 115.45 கோடியும், வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து 160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.