சென்னை ஆர்.கே.நகரில் ரவுடியை வீடுபுகுந்து வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆர்.கே நகரில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் மீது கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஆனந்த்தின் வீட்டுக்குள் நுழைந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.