தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் நிகழ்வில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள சூடம்மாள் அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில், காலை 6.45 மணி முதல் 6.52 வரை சூரிய ஒளிக் கதிர்கள் கோயில் கருவறையில் அமைந்துள்ள அம்மன் சிலை மீதுபடும் அபூர்வ நிகழ்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அம்மன் மீது சூரிய ஒளி விழுவதைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். முன்னதாக, அம்மனுக்கு 27 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.