காரைக்குடியில் உள்ள சாலைகளில் உயரமான பாலம் கட்டப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலை வழியாக மதுரை, தேவகோட்டை, ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளது. இந்நிலையில், பிரதான சாலையிலிருந்து நகருக்குள் செல்லும் குறுக்குச் சாலையோரம் செல்லும் கழிவு நீர் கால்வாயின் மேல், அதிக உயரத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகிறது. வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகின்றனர்.
எனவே, பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.