சென்னை ராயபுரம் ஸ்ரீ செங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்மண்டபம் அருகே உள்ள ஸ்ரீ செங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 51வது ஆண்டு விழா நேற்று கணபதி உற்சவத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விசேஷ மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.