சிவகங்கை அருகே உள்ள திருமலை கிராமத்தில், மடை கருப்பண்ண சாமிக்கு, கிடா வெட்டி விருந்து வைத்து கிராம மக்கள் சிறப்புப் பூஜை செய்தனர்.
தங்களது வேண்டுதல் நிறைவேறினால், கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் மடையையே மடைக் கருப்பணசாமியாக நினைத்து, கிராம மக்கள் காணிக்கை வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு பக்தர்கள் 280 ஆடுகளைக் காணிக்கையாக வழங்கிய நிலையில், அவற்றை பலி கொடுத்து பிரம்மாண்ட கறி விருந்து நடைபெற்றது.
இந்த விருந்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.