தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராஜூ நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாதாங்கோவில் சாலையில் தனது தாயாருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதி அருகே இருந்த மிட்டாய் கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களும், கடை ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த ரமேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.