மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், தீ குண்டத்தில் தவறி விழுந்த மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கீழ்மாந்தூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
ஆண்டு பெருவிழாவையொட்டி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது தீயில் இறங்கிய தவமணி என்ற மூதாட்டி கால் இடறி தீ குண்டத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.