நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் அமைந்துள்ள அட்சயலிங்க சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கீழ்வேளூர் பகுதியில் பழமை வாய்ந்த சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது.
சித்திரை திருவிழாவை ஒட்டி இக்கோயிலின் முன்னதாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அட்சயலிங்க சாமி, அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சரவணப்பொய்கை குளத்தில் தெப்பத்திருவிழா மங்கள வாத்தியங்களுடன் நடைபெற்ற போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.