சென்னை கோயம்பேட்டில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சிறார் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேட்டில் கூலி வேலை செய்து வரும் சந்துரு, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவர், சந்துருவை கத்தியால் குத்திவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சந்துருவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறார் உட்பட மூவரை கைது செய்தனர்.