புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே சாலையில் சிதறிக்கிடக்கும் நிலக்கரி துகள்களால் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகத்திலிருந்து, லாரிகள் மூலம் பல பகுதிகளுக்கும் நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் லாரிகளிலிருந்து சாலையில் சிதறும்நிலக்கரிதுண்டுகளால் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுகிறது.
ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு நிலக்கரியை பாதுகாப்பாக எடுத்து செல்லாத வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.