புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையை அடுத்த சின்னையாபுரம், டி.வி.நகர் ஆகிய பகுதிகளில், குற்றப்பதிவேட்டில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த இளைஞர்களிடமும் சோதனை மேற்கொண்டனர்.
இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அண்மையில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வாய்க்காலிலும் போலீசார் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.