திருவள்ளூர் அருகே ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு விழாவையொட்டி அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் ஆண்டுவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கரிகிருஷ்ணப் பெருமாளும் அகத்தீஸ்வரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வில் கருடவாகனத்தில் பெருமாளும் நந்திவாகனத்தில் சிவனும் காட்சியளித்தனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.