ராமநாதபுரம் பரமக்குடியில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கள்ளழகர் புஷ்பப் பல்லக்கில் சுந்தர ராஜ பெருமாள் கோவிலுக்குத் திரும்பினார்.
கடந்த 23-ம் தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து அரக்கு நிற பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.
சித்திரைத் திருவிழாவின் இறுதியாக தசாவதார நிகழ்ச்சி முடிந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் வீதி உலா வந்து, கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குத் திரும்பினார்.