5 மாதங்களுக்குப் பிறகு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதனை ஏற்றுமதி செய்யத் தடை விதித்து மத்திய அரசு கடந்த டிசம்பர் 8-ம் தேதி உத்தரவிட்டது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வங்கதேசம், இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது..
மேலும், மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.