ஈரோடு, திருப்பத்தூர் வேலூர் உள்பட 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உட்பட 16 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் அத்தியாவசியம் இன்றி வெளியே வர வேண்டாமெனவும், நீர்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.