ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடிக் குட்டிக்கு திறந்த வெளி வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா சீனா இடையேயான நட்புறவின் 70 ஆவது ஆண்டை முன்னிட்டு சீனாவில் இருந்து ஒரு ஆண் பாண்டாவும் ஒரு பெண் பாண்டாவும் மாஸ்கோ விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பாண்டா கரகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் முதல் பாண்டா என்று கூறப்படும் கத்யுஷா என்ற குட்டி பிறந்தது.
இந்த கத்யுஷா பாண்டா குட்டியை பூங்கா நிர்வாகம் சீரிய முறையில் வளர்த்து வருகிறது.