ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடரில் கோவாவை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், முதல் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த மும்பை அணி, இரண்டாம் சுற்றின் முடிவிலும் 5-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்து கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து மே 4-ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை சிட்டி எப்.சி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.