மயிலாடுதுறை அருகே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குத்தாலம் தாலுகா கோமல் கிழக்கு பகுதியிலுள்ள சுமார் 100 ஏக்கர் நிலத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வந்தது.
குறுவை சாகுபடி தொடங்கியதால் விவசாயிகள் நிலத்தை தயார்படுத்தி வந்தனர். இந்நிலையில், அங்குள்ள மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
விவசாய பணிகளை தொடர தண்ணீர் இல்லாததால் மின் கம்பிகளை விரைந்து சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.