ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவோரின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்றத்திற்குமான தேர்தல் மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவோரின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை, அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சட்டமன்றத் தேர்தலில் 2 ஆயிரத்து 705 பேரும், நாடாளுமன்ற தேர்தலில் 503 பேரும் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.