தெலங்கானாவில் ஸ்ட்ராங் பீர் குடிப்பதால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் ஸ்ட்ராங் பீர் எனப்படும் அதிக போதை ஏற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட கலால்துறை அதிகாரியிடம் தருண் என்பவர் மனு ஒன்றை அளித்தார்.
அதில், ஸ்ட்ராங் பீரை குடிப்பதால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.