திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மேடை அலங்கார குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம், மைக் செட் அமைப்பது உள்ளிட்ட தொழிலை செய்து வருகிறார்.
இவரது மேடை அலங்கார தளவாட பொருட்களை வைக்கும் குடோன் நத்தம் மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தது.
இந்நிலையில் இந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்ச2 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.