பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் காலத்துக்கேற்ற பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் உலகமே வியக்கும் வண்ணம் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சேவைகள் ஏற்றுமதி துறையில் இந்தியா பன்மடங்கு வளர்ந்துள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகள் உலகநாடுகளில் நடைமுறைக்கு வந்த பின் ஒரு நாட்டின் தேவைக்கான சேவைகள் இன்னொரு நாட்டிலிருந்தும் செய்யும் வாய்ப்பு பெருகியது.
2000ம் ஆண்டில் பிசினஸ் ப்ராசஸிங் அவுட் சோர்ஸ் BPO எனப்படும் சேவைகள் வந்தன. அதாவது லண்டனில் உள்ள மின்சாரக் கட்டணம் செலுத்தும் வசதி இந்தியாவிலிருந்து நிர்வகிக்கப் படும். இப்படி சொன்னால் எளிதாக புரியும்.
இதன் அடுத்த கட்டமாக GCC குளோபல் கேப்பிலிட்டி சென்டர் எனப்படும் உலகளாவிய திறன் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2014ம் ஆண்டுக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால், இந்த GCC மையங்கள் இந்தியாவில் மிக வேகமாக வளர தொடங்கின. GCC கள் என்பது அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களின் MNC தொழில்நுட்ப நிலையங்களாகும்
ஜப்பானில் Rakuten Pay எனப்படும் GooglePay-க்கு இணையான ஒன்று இருந்தால், ஜப்பானிய நிறுவனமான Rakuten Group-க்கு அதனை இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ஒரு உலகளாவிய திறன் மையம் GCC தான் உருவாகித் தந்தது. மேலும் அந்த சேவைகள் முழுவதையும் பெங்களூருவில் உள்ள GCC தான் நிர்வகிக்கிறது.
இந்த ஜிசிசி எனப்படும் உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கு கடந்த 18 ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மேலும் உலகளாவிய திறன் மையங்களின் ( ஜிசிசி ) விரிவாக்கம் இன்னும் வேகமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
GCC மையங்களின் அதிகரிப்பால் இந்தியாவில் ரியல் எஸ்டேட், உட்பட பிற துறைகளிலும் சேவைகள் ஏற்றுமதி வளர்ந்தது . அதன் காரணமாக, இலட்சக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. ஜிசிசி மையங்களின் வருமானம் அதிகரித்தது.
இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது.
இந்தியாவின் சேவை ஏற்றுமதிகள் 2005ம் ஆண்டில் இருந்ததை விட, சென்ற ஆண்டு இருமடங்கு அதாவது 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 340 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சரக்கு ஏற்றுமதி துறையில் மட்டும் இன்றி கம்ப்யூட்டர் சேவை துறைகளிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் தொழில்முறை ஆலோசனை சேவைகளிலும் இந்தியா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்றும் அந்த அறிக்கை கோடிட்டு காட்டி இருக்கிறது .
உலகளாவிய திறன் மையங்கள் ஜிசிசிகள் இன்று இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு என இந்திய ஜிசிசிகள் உலக பெரும் நிறுவனங்களைக் கோலோச்சுகின்றன .
தற்போது நாடு முழுவதும் உள்ள 2500 GCC களில் ஏறத்தாழ 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணியாற்றுகின்றனர். டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்கள் மட்டுமின்றி, மதுரை, கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் ஜிசிசி மையங்கள் வரத் தொடங்கி விட்டன.
உலக ஜிசிசி சந்தையின் 50 சதவீதத்தை தன் கட்டுப்பாட்டில் இந்தியா வைத்துள்ளது. இந்தியாவின் சேவை ஏற்றுமதிகள் 2005 ஆண்டில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகரித்து உள்ளது. மதிப்பீட்டளவில் இது 340 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இந்த சேவைகளுள் கம்ப்யூட்டர் சேவைகள் ஆதிக்கம் செலுத்தும் துறையாக இருந்தாலும் ,மற்ற துறை சேவை ஏற்றுமதிகளும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக, தொழில்முறை ஆலோசனை ஏற்றுமதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்று பிரதமர் மோடி சொன்னது நிறைவேறும் என்பதற்கு கோல்டுமேன் சாக்ஸ் நிறுவன அறிக்கையே சாட்சியாக உள்ளது.