வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் மாதத்தின் முதல் நாளான இன்று, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைந்து ஆயிரத்து 911 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் 818 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகிறது.