ரசாக்கர்கர் பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத்தை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தை தொகுதியில் போட்டியிடும் மாதவி லதாவை ஆதரித்து அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், சுமார் 40 ஆண்டுகளாக ஹைதராபாத் தொகுதி AIMIM கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரசாக்கர்கர் பிரதிநிதி அமர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த தேர்தலில் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எனவே ஹைதராபாத் தொகுதியை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் மாதவி லதாவை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற அமித் ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி ஸ்ரீ மகான்காளி கோவிலில் அமித் ஷா தரிசனம் செய்தார்.