மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி பொறுப்பேற்பார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது துணைவியாருடன் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி பொறுப்பேற்பார். காவிரி டெல்டா பகுதியில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை உடனடியாக சீர் செய்யாவிட்டால், தமிழக மக்கள் திமுகவைப் புறக்கணிப்பார்கள் எனத் தெரிவித்தார்.