ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதின.
முதலில் ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.