மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பில், சிலம்பாட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
சுழற்சி முறையில் ஒற்றைக் கம்பு, சொடிக்குச்சி, சுருள்வால் உள்ளிட்ட 10 விதமான தற்காப்பு கலை உபகரணங்களை தொடர்ந்து 10 மணி நேரம் சுழற்றி சாதனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று சாதனை நிகழ்த்தினர்.
இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.