மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மணிஷ் சிசோடியா தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை கடந்த 30ஆம் தேதி விசாரணையின் போது கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.