வணிகர்களின் ஒற்றுமை நிலை நாட்டும் வகையில் மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பொதுமக்கள் கார்பரேட் கம்பெனிகளை தேடி செல்வதை தடுக்க, கடைகளில் ஒரு நாள் முன்பே, வணிகர்கள் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் வணிகர் சங்கம் காக்கப்பட வேண்டுமென்றால் ஒற்றுமையாக மே 5 ஆம் தேதி விடுமுறை விடுங்கள் என்றும் வணிகர்களை அருண் கேட்டுக்கொண்டார்.