அமெரிக்காவின், பென்சில்வேனியா பகுதியில் 17 பேரை ஊசிபோட்டு கொன்ற பெண் செவிலியரை போலீசார் கைது செய்தனர்.
பென்சில்வெனியா பகுதியைச் சேர்ந்த ஹீதர் பிரஸ்டி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் மீது எழுந்த கொலை புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது 17 பேருக்கு அதிக வீரியம் கொண்ட ஊசிகளை வேண்டுமென்றே செலுத்தி கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்பதாலே கொன்றேன் எனவும் ஒப்புக்கொண்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட செவிலியர் ஹீதர்பிரஸ்டிக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.