தென்காசி அருகே நடைபெற்ற பாரம்பரிய நெல் அறுவடை திருவிழாவை கல்லூரி மாணவிகள் குலவையிட்டு தொடங்கி வைத்தனர்.
வலசை கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.
பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, கருப்பு கவுனி உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ள இவர், அதற்கான அறுவடை திருவிழாவை கல்லூரி மாணவ மாணவிகளைக் கொண்டு நடத்தினார்.
பாரம்பரிய முறையில் குலவையிட்டு, கதிர் அறுக்கும் பண்ணரிவாள் கொண்டு மாணவ மாணவிகள் அறுவடையைத் தொடங்கி வைத்தனர்.