திருப்பூரில் வெயிலின் தாக்கம் குறைந்தும், நல்ல மழை வேண்டியும் இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் திருப்பூர் அனைத்து பள்ளிவாசல்களும் இணைந்து சிறப்பு தொழுகையை நடத்தினர்.
இதே போன்று சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், மழை வேண்டி இஸ்லாமியர்கள் சட்டையை திருப்பி அணிந்து சிறப்புத் தொழுகை நடத்தினர்.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பில், புதூர் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், மழை வேண்டி ஆண்கள் சட்டையை திருப்பி அணிந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.