திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒன்றரை லட்சம் குடும்பத்திற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கோபாலபுரத்தில் உள்ள மின் நிலையத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு 3 ராட்சத டிரான்ஸ்பார்மரில் ஆயில் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் துணை மின்நிலையத்தை சீரமைக்க 3 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு மின்விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.